மொழி கல்வி மற்றும் பயிற்சி பற்றிய தேசிய நிறுவகம் 2007 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது.
மொழிக் கல்வி மற்றும் பயிற்சியினை மேம்படுத்துவதற்கான சுய அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி தொழிற்பாடுகளுக்கு வசதிகளை ஒழுங்கு செய்யும் தன்னிகரற்ற அமிசங்கள், மொழிக் கல்வி மற்றும் பயிற்சி பற்றிய தேசிய நிறுவகத்திடம் காணப்படுகின்றன.
நிவாரண உணர்வுடன் செயற்படுவதற்கும் ஆராய்ச்சி ரீதியான ஆய்வுகளுக்கு பொருத்தமான சூழ்நிலையினை ஒழுங்கு செய்வதற்கும் ஏற்ற வகையில் இந்த நிறுவகமானது நகர குழப்பமான சூழ்நிலையிலிருந்து சற்று விலகிய சூழலில் அமைந்துள்ளது.
மொழிபெயர்ப்பாளர்கள், உரைபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழி போதனா ஆசிரியர்கள் ஆகியோருக்கான பயிற்சி பாடநெறிகள் இங்கு நடைபெறுகின்றன.